Sunday 24 January 2016

இசையானவள்

இசையெல்லாம் இசையானவளே

----------------

மனசுக்கு பிடித்தமான ஒரு இசை. அது அதன் அழகை என் தனிமையில் இறைக்கிறது. இருளுக்குள்ளும் இரவுக்குள்ளும் நிறைந்திருக்கிற இந்த என் மௌனவெளியில் ஒரு இசை திறந்துகிடக்கிறது. அதன் ராகத்தை செவிப்புனல் வழி என் உள்வெளியில் அனுப்பிவைத்திருக்கிற  ப்ரியத்தின் ரகசியம் இப்போது இசைச்சாறை பருகுகிறது. ஒலியின் கட்டமைப்பு ஏற்படுத்துகிற ஒரு பிரம்மிப்பை  என் ஹார்மோன் நாளங்கள் ஆக்கிரமைத்து கொண்ட மாயகணம் நான் ஆதியின் ஒலிவடிவைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்த தனிமையின் செவிகளில் இசைப்புயலொன்று, புன்னகையை வீசுகிறது.
என் இருப்புக்குமேல் ஒரு இசைஇறகொன்று அமர்ந்து என்னை இயங்கவிடாமல் செய்கிறது.

என் தனிமையெங்கும் உன் இசைதான். என் இருப்பு எங்கும் உன்வெளி தான். என் அறையின் நான்கு பக்கங்களும் இசையின் திசைதான்.என் இருட்டின் ஒவ்வொரு விண்மீனும் இசையின் நிறம்தான்.

இசைவெளியில் லயித்துக்கிடக்கிற செவிகளில் ஒன்றாக கொண்டாடுகிறேன் அவளை.
அவள் இசையின் உருவம். வீணையின் முகம். இசையால் நிறம்பிஇருக்கிற பிரபஞ்சத்தில் வனத்தில் மிதக்கும் இசை அவள்தான்.

அவளாக்கப்பட் இந்த வானத்தில் என் ஹார்மோனியம் சிதறிய ஒலிஉரு இந்த பெருத்தமௌனம்.

நுரையீரல் நுழைகிற காற்றின் கீதத்தில் அவள் பார்வைகள் புலப்படுகின்றன. தேகம் தொடுகிற இசையின் புன்னகையில் அவள் வெட்கம் தீண்டப்படுகின்றன. இந்த பிரபஞ்ச இருப்பில் நான் விரும்பிய வழியெங்கும் இசையின்பயணம். இசையாக கொண்டாடுகிற ஒருத்தியின் கூசும்புன்னகையில் என் நிழல் உதிக்கிறது.

நிழல்பரப்பைத் தீண்டுகிற அவளின் இசைமணல், ஒரு ரீங்காரத்தை எழுப்புகிறது. இசையோடு இசையானவளை தொட்டுப்புணர்கையில் என் நாணநெழிவில் இசையின் குரல்.

அவள் பார்வையின் கிடத்தலில் இசை கண்களால் மீட்டப்படுகிறது. அவள் தேகத்தின் தொந்தரவுகளில் இசை மயிற்களால் உரசப்படுகிறது. அவள் அகத்தின் புனைவில் இசை கவிதையாய் பேசப்படுகிறது.

நீயும் நானும்  இசைத்துளிகள் தான்.
நம்மை உரசுகிற சிறுமழையில் பெரும்இசையாவோம்.

உயிரேரேரேரே..... வா .!

" நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி "

- அதிரூபன்

No comments:

Post a Comment